Thursday, December 20, 2012

SEO என்பது என்ன?

SEO என்பது search engine optimization எனப்படும்.கூகிளில் நாம் எதையாவது தேடுகிறோம் என்பதாக வைத்துக்கொள்வோம். see results என்பதாக முதல் பக்கத்தில் வருகிறதல்லவா? அது எப்படி வருகிறது? நம் இணைய தளத்தை அது போல கொண்டுவர நாம் செய்யும் சில உத்திகள் தான் SEO எனப்படுகிறது.




அது என்ன உத்திகள்? அதை தெரிந்து கொள்ள சில அடிப்படை விசயங்களை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். குமார் என்பவர் ஒரு தளம் வைத்திருப்பதாக கொள்வோம். பெரும்பாலும் இரண்டு வகைகளில் தளங்கள் இருக்கின்றன. ஒன்று பிஸினஸ் சார்ந்து..இன்னொன்று பர்சனல் எனப்படும் சொந்த உபயோகத்துக்கானது.

பிஸினஸ் சார்ந்ததில் பிஸினஸ் தொடர்பான எல்லாம் இருக்கும்.உதாரணமாக நீங்கள் ஒரு இட்லிகடை வைத்திருப்பதாக கொள்வோம். உங்கள் இட்லிகடை எங்கே அமைந்திருக்கிறது? மற்ற இட்லிக்கும் உங்கள் இட்லிக்கும் என்ன வித்தியாசம்? எத்தனை வகை சட்டினி வழங்குகிறீர்கள் என்பதாக உங்கள் தளத்தில் எழுதி.. அழகழகான இட்லி படத்தை போட்டு அணுகவும் என கடையின் முகவரி போன் நம்பர் போட்டு ஒரு தளம் துவங்கி விட்டீர்கள். kuppusaamiidlikadai.blogspot.com என தளத்தின் பெயரை விசிட்டிங் கார்டில் போடுவதோடு உங்கள் வேலை முடிந்து விடுவதில்லை. காரணம் நீங்கள் கொடுக்கும் விசிட்டிங் கார்டு யாரிடமெல்லாம் கொடுக்கிறீர்களோ அவர்களெல்லாம் உங்கள் தளத்தை பார்ப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

சரி இட்லிகடைக்காக போய் எவனாவது தளம் துவங்குவானா? என்பதாக வெல்லாம் யோசிக்காதீர்கள் உலகம் சுருங்கி விட்டது. வெளி நாட்டுக்கு உங்கள் இட்லியை ஏற்றுமதி செய்வதாக வைத்துக்கொள்வோம். நாம் இட்லி விற்கிறோம் என்பது வெளி நாட்டுகாரனுக்கு தெரிய வேண்டும். அதற்கு நம் தளம் உதவும். அதற்காக தளம் துவங்கி விட்டோம். ஆனால் அவன் நம்முடைய தளத்திற்கு எப்படி வருவான்.

இட்லி கடை என கூகிளில் தேடினாலே முருகன் இட்லி கடையை தானே காட்டுகிறது. என்னுடைய இட்லி கடையை காட்ட மாட்டேன் என்கிறதே.. கூகிளுக்கும் நமக்கும் என்ன வாய்க்கா தகராறா? கூகிள்  நம்முடைய தளத்தையும் காட்ட வேண்டுமென்றால் நாம் கொஞ்சம் மெனக்கெட வேண்டும். அவ்வளவு தான். அதற்காக நாம் மேற்கெள்ளும் முயற்சி தான் இந்த SEO எனப்படும் Search Engine Optimization. இது பற்றி விரிவாக திங்கள் கிழமை தெரிந்து கொள்வோம்.

No comments:

Post a Comment